முன்னணியின் மரநடுகை வடமராட்சி கிழக்கில்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மரநடுகை நிகழ்வு இன்று காலை 9:30 மணியளவில் வடமாராட்சி கிழக்கு அம்பன் கொட்டோடை பகுதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பத்தாயிரம் பனம் விதை நடுகை திட்டமே இன்று காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கலந்து கொண்டார்.

எமது நிலம் எமது மரம் திட்டத்தில் இன்று நடைபெற்ற பனை (10000) நடுகையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலரும் கலந்து கொண்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்