அ.தி.மு.க. வட்டச்செயலாளர் அதிரடியாக நீக்கம்

திருச்சி- தில்லை நகர் பகுதியின் வட்டச் செயலாளர் செக்கடி சலீமை அ.தி.மு.க அதிரடியாக நீக்கியுள்ளது.

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

வட்டச் செயலாளர் செக்கடி சலீம் கழகத்தின் கொள்கை, குறிக்கோள்கள் மற்றும் கோட்பாடுகள் ஆகியவற்றுக்கு முரணான வகையில் செயற்பட்டுள்ளார்.

இவரின் இத்தகைய தவறான செயற்பாட்டால் தற்போது கழகத்துக்கு அவப்பெயர் ஏற்படும் நிலைமை உருவாகியுள்ளது.

இதனால் திருச்சி மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தில்லைநகர் பகுதி 49-ஏ வட்ட செயலாளர் முகமது சலீம் செக்கடி சலீம்மை, இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் கட்சி நிருவாகம் அதிரடியாக நீக்குகின்றது என அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்