வயிற்று வலிக்கு சிகிச்சை பெற சென்ற சிறுமிக்கு பிரசவம்!!

உடுதும்பர மருத்துவனை வளாகத்தில் புதைக்கப்பட்டிருந்த கருவொன்று தெல்தெனிய நீதவான் முன்னிலையில் நேற்று தோண்டியெடுக்கப்பட்டுள்ளது. 5 மாதங்களான ஆண் கருவொன்றே இவ்வாறு புதைக்கப்பட்டிருந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

வயிற்கு வலிக்கு சிகிச்சைப் பெற தமது பெற்றோருடன் வந்த 15 வயது சிறுமியே கருவை பிரசவித்தார் என்று கூறப்படுகின்றது.

சிகிச்சைக்காக மருத்துவமனை வந்த போது மருத்துவர் மருந்து ஒன்றை அந்த சிறுமிக்கு கொடுத்தார் என்றும், அதனை அருந்திய பின்னர் சிறுமிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு 5 மாத கருவை பிரசவித்தார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

மருத்துவரின் ஆலோசனைக்கு அமைய தாதியர்கள் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள், அந்த கருவை மருத்துவமனை வளாகத்தில் புதைத்துள்ளனர். அந்த சிறுமி, கண்டி மருத்துவமனைக்கு அனுப்பப் பட்டார்.

கண்டி மருத்துவமனையில் அந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவருக்கு கருகலைப்பு செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொண்டனர். இது தொடர்பில் கண்டி, சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். பின்னர் உடுதும்பர பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட என்று தெரிவிக்கப்பட்டது.

சிறுமி கண்டி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், கரு, மருத்துவமனை வளாகத்தில் புதைக்கப்பட்டமை தொடர்பில் அந்த மருத்துவருடன், தாதியர்கள் மற்றும் மருத்துவமனை உதவியாளர்களிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்