வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் நியமனம்!

விந்தன் கனகரட்ணத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியாமைக்கு தான் வருந்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்துக்கும், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தாவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

நேற்று ரெலோ அமைப்பிடமிருந்து போக்குவரத்துத் துறை அமைச்சரான டெனீஸ்வரனை பதவி விலக்குமாறும் அவரது இடத்திற்கு விந்தன் கனகரட்ணத்தை நியமிக்குமாறும் முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

இதனையடுத்து, வடமாகாண முதலமைச்சர் விந்தன் கனகரட்ணத்துக்கும், ரெலோ அமைப்பின் செயலாளர் சிறிகாந்தாவுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

அக்கடிதத்தில், விந்தன் கனகரட்ணத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியாமைக்கு வருந்துவதாகவும், சுகாதார அமைச்சராக, அதற்குரிய தகுதிகளுடன் காணப்படுகின்ற வைத்தியர் குணசீலனை நியமிப்பதாகவும், விந்தன் கனகரட்ணத்தை தன்கீழுள்ள போக்குவரத்து அமைச்சின்கீழ் இணைந்து செயற்பட முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஏற்கனவே சிவனேசன் அவர்களுக்கு வழங்கவுள்ளதாகவும் விந்தன் கனகரட்ணத்துக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்