டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அடுத்த மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
குறித்த வழக்கு நேற்று (திங்கட்கிழமை) குறுக்கு விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சாட்சிகள் ஆஜராகாத காரணத்தால் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவில் அந்நிய செலவாணி மோசடியில் ஈடுபட்டதாக 1996 ஆம் ஆண்டு டி.டி.வி. தினகரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அமலாக்கத்துறையால் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் எழும்பூர் குற்றவியல் 2ஆவது நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.