முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு!

கிளிநொச்சி முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கலந்துரையாடினார்.

குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவுச் சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது கூட்டுறவாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் வடக்கு மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் கேட்டறிந்து கொண்டார். இதன்பேது கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

“தென்னிலங்கை வியாபாரிகள் ஒரு சவாலாக உள்ளனர். அவ்வாறான சவால்களை முறியடிக்கும் வகையில் இங்கு ஏதேனும் திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்.

இழப்பீடுகள் கட்டாயம் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பாக யுத்தத்தினால் அனைத்து மக்களும் பல்வேறு இழப்புக்களை சந்தித்துள்ளனர். வீட்டுத்திட்டம் கிடைத்துள்ளதென தெரிவித்து மக்கள் அமைதியாக உள்ளனர்.

ஆனால் அதற்கு மேலான சொத்து இழப்புக்கள் மக்களிற்கு ஏற்பட்டுள்ளது, குறித்த இழப்புக்கள் வழங்கப்படுதல் தொடர்பில் நாமும் பேசுவோம். அதே வேளை நீங்களும் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என இதன்போது தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்