எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்: வைகோ

எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிருபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ தஞ்சையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக சமூக நீதிக்கு மத்திய அரசு வேட்டு வைக்கும் பணியில் ஈடுபட்டு விட்டது. இதனால் ஏழை, கூலி தொழிலாளி, டெய்லர் மகன்கள் டாக்டர் ஆக முடியாது.

நான் உலக புகழ் பெற்ற டாக்டர்களிடம் கருத்து கேட்டேன். அவர்கள் அரசு பள்ளியில் படித்து தான் டாக்டர் ஆனதாக கூறினார்கள். தமிழகத்தில் 3 ஆயிரத்து 340 மருத்துவ இடம் உள்ளது.

இதில் 80 சதவீதம் பேர் வெளி மாநில மாணவர்கள் படித்து அவர்கள் டாக்டராகி வேறு மாநிலத்துக்கு சென்று விடுகிறார்கள்.

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கப்படும் என 1½ மாதங்களாக அமைச்சர்களை வரவழைத்து காலில் விழ வைத்து தற்போது விலக்கு அளிக்க முடியாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது.

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசுக்கு மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கவர்னரை சந்தித்து வாபஸ் கடிதம் கொடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இது உண்மை என்றால் சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க எடப்பாடிக்கு உத்தரவிடும் பொறுப்பு கவர்னருக்கு உள்ளது.

இவ்வாறு வைகோ கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்