சிறைதண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனு தள்ளுபடி

சொத்து குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறைதண்டனையை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர். அவர்கள் தாக்கல் செய்திருந்த மனுவில் தாங்கள் அரசு ஊழியர்கள் இல்லையென்பதால் ஊழல் தடுப்பு சட்டப்படி தங்களை தண்டிக்க முடியாது என குறிப்பிட்டிருந்தனர். மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் மூவருக்கும் விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து, சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரிய மனுவை நீதிபதி பாப்டே, அமித்தவராய் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

முன்னதாக சொத்து குவிப்பு வழக்கில் மறைந்த ஜெயலலிதா, சசி, இளவரசி, சுதாகரனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உறுதி செய்து தீர்ப்பு அளித்தது. ஜெயலலிதா மறைந்து விட்டதால் அவரை தவிர்த்து மற்ற மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டு, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் தங்களுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து அவர்கள் மூவரும் தாக்கல் செய்த மனு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

About இலக்கியன்

மறுமொழி இடவும்