விமானதாக்குதலில் யேமனில் 35 பேர் பலி

யேமன் தலைநகர் சனாவில் புதன்கிழமை இடம்பெற்ற விமானதாக்குதலில் 35 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹவுத்தி கிளர்ச்சிக்காரர்களின் நிலையை இலக்குவைத்து சவுதிஅரேபியா தலைமையிலான கூட்டணியினால் மேற்கொள்ளப்பட்ட விமானதாக்குதலிலேயே பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். சிறிய ஹோட்டல் ஓன்றின் அருகில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஹோட்டலின் கூரை இடிந்து விழுந்துள்ள இரு உடல்கள் தொங்கிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகின்றது என பொதுமக்கள் நேரி;ல் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்
இதேவேளை இடிபாடுகளின் மத்தியிலிருந்து 35 உடல்களை மீட்டுள்ளோம் என தெரிவித்துள்ள மருத்துவவட்டாரங்கள் மேலும் பலரின் உடல்கள் உள்ளேயிருக்கலாம் என தெரிவித்துள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்