சுமந்திரன் கொலை முயற்சி – முன்னாள் போராளிகளுக்கு மறியல் நீடிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மீதான கொலை முயற்சி வழக்கு சந்தேகநபர்கள் ஐவரினது விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று கிளிநொச்சி நீதிவான் மன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலை நீடித்து நீதிமன்று உத்தரவிடது.

சந்தேகநபர்கள் பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முயற்சித்தமை உட்பட சில குற்றச்சாட்டுக்களின் கீழ் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி பயங்கரவாத தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களுக்குத் தொடர்ச்சியாக விளக்கமறியல் நீடிக்கப்பட்டு வருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்