பொலிஸ் அதிகாரியின் உருவப்பொம்மையை எரித்தார் அம்பிட்டியே சுமனரத்ன தேரர்!

மட்டக்களப்பு மங்களராம விகாரை விகாரதிபதி அம்பிட்டிய சுமணரட்ண தேரர் பொலிஸாருக்கு எதிராக பொலிஸ் உத்தியோகத்தரின் உருவப்பொம்மை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

தனக்கு எதிராக எவ்வித விசாரணையுமின்றி நீதிமன்றத்தில் வழக்கு தாக்குதல் செய்தமையைக் கண்டித்து இன்று (புதன்கிழமை) தேரர் பொலிஸ் உடை அணிந்த உருவப்பொம்மை ஒன்றை விகாரை பகுதியில் வைத்து தீயிட்டு எரித்து தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

குறித்த விடம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கடந்த மாதம் கெவிலியாமடு விகாரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மது போதையில் இருந்த போது அவருக்கும் தேரருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாத்தினையடுத்து தோர் மங்களகம பொலிஸ் நிலைத்தில் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் மது போதையில் கடமையில் ஈடுபட்டமை உறுதி செய்யப்பட்டது, இதனையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பதவி நீக்கம் செய்யப்பட்டார், ஆனால் அவர் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் தேரர் தன்னை தாக்கியதாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஆனால் இது தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது இது தொடர்பாக பொலிஸாரினால் வாக்கு மூலம் எதுவும் பெறவில்லை.

பொலிஸார் மீத எவ்விதமான நம்பிக்கையும் இல்லாமல் போயுள்ளதுடன் இது எனக்கு எதிராக பொலிஸாரினால் சோடிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு என தேரர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்