விடுதலைப் புலிகளால் தனக்கு ஆபத்தாம் – சிறீலங்கா கடற்படைத் தளபதி சின்னையா!

தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் பலவற்றை மூழ்கடித்ததால் அவர்களது அச்சுறுத்தல் தனக்கு இருக்கின்றதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சின்னையா தெரிவித்துள்ளார்.

வைஸ் அட்மிரல் சின்னையா கடற்படைத் தளபதியாக பதவியேற்றபின்னர் நேற்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தினார். அதில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் மீண்டும் போர் ஏற்படுவதற்கான சூழல் உருவாகும் என நான் நினைக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் பல கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டதால் அவர்களது அச்சுறுத்தல் எனக்குத் தொடர்ந்த வண்ணமுள்ளது. போர் முடிவுக்கு வந்தாலும் எனக்கு அச்சுறுத்தல் தொடர்கின்றது.

என்னுடைய காலத்தில், கடற்படையிலும், அரசாங்கத்தினால் ஒதுக்கப்படும் நிதிப் பயன்பாடுகளிலும் வெளிப்படைத் தன்மை பேணப்படும்.

அத்துடன் சிறிலங்கா கடற்படையை அதிகமான திறமை மற்றும் தொழிற்திறன் கொண்டதாக மாற்றுவதே எனது இலக்கு எனவும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்