தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வடமாகாண சபையின் 103வது அமர்வு இன்று அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அமர்வின் ஆரம்பத்தின் போது வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டமானது நடைபெற்றது.

5 நிமிடம் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தண்டனை பெற்ற கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குங்கள்

அரசே! அரசியல் கைதிகளை விடுதலை செய்,பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய், புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு ஆயுள் தண்டனையா? சிறைச்சாலைகளில் அரசியல் கைதிளை வைத்து கொண்டு தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா? ஜே.வி.பி. அமைப்பில் இருந்தவர்களுக்கு 1971, 1989களில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது. எம்மவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட முடியாதா? என எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியிருந்தவாறு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

வட மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை மற்றும் இராணுவத்தினர் வசமுள்ள மக்களின் பூர்வீக காணிகளின் விடுவிப்பது தொடர்பிலும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தின் அடிப்படையில், இந்த விடயம் தொடர்பாக விரிவான அறிக்கையொன்றை தருமாறு வட மாகாண ஆளுநரிடம் கோரப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். அதனைத் தொடர்ந்து கவனயீர்ப்பு போராட்டத்தினை நிறைவு செய்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்