போதைப்பொருள் கடத்தியதாக சிங்கப்பூரில் தமிழருக்கு வாழ்நாள் சிறை!

சிங்கப்பூரில் போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் இந்திய வம்சாவளி தமிழரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மலேசியாவில் வசித்து வந்தவர் சரவணன் (வயது 30). இந்திய வம்சாவளி தமிழர். இவர் அங்குள்ள ஜோஹர் மாகாணத்தில் அயா என்று அறியப்படுகிற போதைப்பொருள் கடத்தல் மன்னனின் அந்தரங்க சாரதியாகவும்
மெய்க்காப்பாளராகவும் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இவர் 10 பாக்கெட் கஞ்சா மற்றும் கஞ்சா பொருட்களை கடத்திச்சென்றதாக சிங்கப்பூரில் பிடிபட்டார்.

இது தொடர்பாக அவர் மீது அங்குள்ள நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் நடந்த சம்பவம் குறித்து எடுத்து கூறினார்.அதாவது, சரவணன் தனது மகனது அறுவை சிகிச்சைக்காக அயாவிடம் 1,270 சிங்கப்பூர் டாலர் கடன் வாங்கி உள்ளார். அந்தப் பணத்தை அவர் திருப்பி செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் 5-ந் திகதி, ஐயாவிடம் வந்தார். அவரது பணத்தை திருப்பித்தராத நிலையில் அவர் உத்தரவிடுகிற பணியை செய்வதாக கூறினார். அவரும், தான் தருகிற 10 பாக்கெட் புகையிலையை தான் சொல்கிற நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

அதை அவரும் ஏற்று, புகையிலைதானே என்று கருதி பெற்று சென்றிருக்கிறார். அப்போதுதான் அவர் மாட்டிக்கொண்டார். அதில் இருந்தது கஞ்சா என்பது அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது.இதை நீதிமன்றம்
ஏற்றுக்கொண்டது.

அரசு தரப்பும், சரவணன் கூரியர் ஏஜெண்டுபோலதான் செயல்பட்டுள்ளார் என்பதை உறுதி செய்தது. அதைத் தொடர்ந்து அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய நிலையில், அதற்கு பதிலாக வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்