கேட்க நாதியற்றவர்களாக 163 ஆவது நாளாக தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டம்!

சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களது விடுதலையை வலியுறுத்தி அவர்களது உறவுகள் மருதங்கேணியில் மேற்கொண்டு வரும் போராட்டம் 163 ஆவது நாளாகத் தொடர்ந்து வருகின்றது.

கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது…? அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா… இல்லையா…? இருந்தால் அவர்களைப் பற்றிய தகவல்களையாவது வெளிப்படுத்துமாறு வலியுறுத்தி அவர்களது உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.

தமிழ் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட எவரும் வந்து பார்வையிடாததுடன் அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு கூட நாதியற்றவர்களாக அந்த உறவுகள் 163 ஆவது நாளாக தமது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றார்கள்.

ஈழதேசம் இணையத்திற்காக தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்