அமைச்சர் விஜயகலாவின் வாக்குமூல அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் வாக்குமூல அறிக்கை ஊர்காவற்துறை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடமும் வாக்குமூலம் பெற்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவ் வழக்கு நேற்று முந்தினம் (22) யாழ் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இவ்வழக்கின் சந்தேக நபரான வடமாகாண முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க மன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.

கடந்தமுறை நீதிமன்ற உத்தரவுக்கமைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் இரண்டு பொலிஸ் அதிகாரிகளிடம் பெறப்பட்ட வாக்குமூல அறிக்கைகள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

இதையடுத்து சந்தேகநபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் பிணை கோரிக்கையை முன்வைத்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்