நெதர்லாந்தில் இடம்பெறவிருந்த பயங்கர தடுக்கப்பட்டது

நெதர்லாந்தில் ரோட்டர்டாம் நகரில் ஏரிவாயு நிரப்பப்பட்ட வேன் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தின் மேற்கு ஹோலாந்து மாகாணத்தில் இருக்கும் ரோட்டர்டாம் நகரில் அமெரிக்காவின் பிரபல இசைக்கச்சேரி நடைபெற இருந்தது.

இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்றிருந்தநிலையில், அந்நகரில் எரிவாயு நிரப்பப்பட்ட வேன் ஒன்று பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டின் பதிவு எண்களை கொண்ட அந்த வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, அந்நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்