எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

எல்லை நிர்ணயத்தின் போது யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களைக் கணக்கிலெடுக்குமாறு ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் முஸ்தபா ஆகியோரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியிருந்தது.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இக்கோரிக்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், எல்லை நிர்ணயம்தொடர்பாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் கருத்துத் தெரிவிக்கையில்,

‘வெளி­நா­டு­க­ளில் உள்ள 14 லட்­சம் தமிழ் மக்­கள் கணக்­கில் எடுக்­கப்­ப­டா­மல் எல்லை நிர்­ண­யம் மேற்­கொள்­ளப்­பட்­டது. தமிழ் பிர­தி­நித்­து­வம் வெகு­வாக வீழ்ச்­சி­ய­டை­யும் ஆபத்து ஏற்­பட்­டுள்­ளது.

எல்லை நிர்ணயம் செய்யும்போது இனப் பரம்பல் மற்றும் இடப் பரம்பலைக் கருத்திலெடுத்தே மேற்கொள்ளப்படவேண்டும். ஆனால், இவை எவையும் மேற்கொள்ளப்படவில்லையெனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்