இனப்பிரச்சினைக்கு தீர்வை கோட்டாவிடம் இந்தியா வலியுறுத்தும் – விக்னேஸ்வரன்

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்தியா வலியுறுத்தும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்தமை குறித்து வாரம் ஒரு கேள்வி பதிலில் சி.வி.விக்னேஸ்வரனிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

அந்த கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவி ஏற்ற மறுநாளே இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கொழும்பு வந்து சந்தித்து சென்றிருக்கின்றமை அரசியல் ரீதியில் மிகவும் முக்கியமானது என்றே நான் கருதுகின்றேன்.

தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி, பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் போன்ற விடயங்களில் இந்தியாவுக்கு பலத்த கரிசணை உண்டு. அதன் நிகழ்ச்சித் திட்டங்களில் இலங்கையின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதில் இந்தியா கொண்டிருக்கும் ஆர்வத்தை இது தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

அதேவேளை, இலங்கையில் தமிழ் மக்களின் இன பிரச்சினை தொடர்பாக ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வு ஒன்றைக் கொண்டுவருவதில் இந்தியா தனக்கு இருக்கும் கடப்பாட்டை புரிந்துகொண்டுள்ளது. அதன் காரணமாக புதிய ஜனாதிபதிக்கும் புதிய அரசாங்கத்துக்கும் ஆலோசனைகளை இந்தியா கொடுக்கும் என்று நான் ஆழமாக நம்புகின்றேன்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து இந்தியா பிரஸ்தாபிக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு.

இணைந்த வடக்கு, கிழக்கில் சுயநிர்ணய உரிமைகள் அடிப்படையிலான தீர்வு ஒன்றை இந்தியா ஏற்படுத்த வேண்டும் என்பதே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு. இதனை நரேந்திர மோடி தலைமையிலான இந்திய அரசாங்கம் செய்யும் என்று தமிழ் மக்கள் முழுமையாக நம்புகின்றார்கள். ஏற்படுத்தப்படும் எந்த ஒரு தீர்வும் நிலையானதாகவும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியதாகவும் இருக்கவேண்டும்.

குறிப்பாகத் தமிழ் மக்கள் தமது பூர்வீகப் பகுதிகளில் தமது பாரம்பரியம், அடையாளம் மற்றும் பொருளாதார வளம் ஆகியவற்றைத் தாங்களே நிர்வகிக்கும் வகையில் காணி மற்றும் பொருளாதார விடயங்களில் முழுமையான அதிகாரங்களைக் கொண்டிருக்கும் வகையில் தீர்வு அமையவேண்டும்.

தனி ஒரு மதத்துக்கு முன்னுரிமையையும் சிறப்பு சலுகையையுங் கொடுப்பது எந்தளவுக்கு ஏனைய சமூகங்களின் மனித உரிமைகள் மற்றும் கலாசாரங்களைப் பாதிக்கும் என்பவை எல்லாம் கவனத்தில் கொள்ளப்படவேண்டும்.

ஆகவே, இறுதி தீர்வு தொடர்பாக எல்லா தமிழ் கட்சிகள் மத்தியிலும் கருத்து ஒற்றுமையை ஏற்படுத்தும் பொருட்டு கலந்துரையாடல்கள் நடைபெற வழிவகுக்கப்பப்பட வேண்டும்.

ஐந்து கட்சிகளும் தற்போதும் 13 கோரிக்கைகளை வலியுறுத்துவதாக அறிவித்தால் எம்முள் ஒருவர் எமது கருத்தொற்றுமையை புதிய அரசாங்கத்திடமும் இந்தியாவிடமும் வலியுறுத்தலாம்” என மேலும் தெரிவித்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான ரெலோ மற்றும் புளொட் ஆகிய இரண்டு கட்சிகளும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி வடக்கு மாகாண முன்னாள்
தாங்கள் தான் உண்மையான மாற்று அணியென தமிழ் தேசிய மக்கள் முன்னணி முரண்டுபிடிக்க வட மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ்
நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டிய கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கேஸ்வரன் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்