கடத்தல் பாரதியை விடுதலை செய்! ஆர்ப்பாட்டம்

அண்மையில் கஞ்சா கடத்திய போது கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் இனியபாரதியை ஆள் கடத்தல் வழக்கில் விளக்கமறியளலில் வைக்க இன்று (21) அம்பாறை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் அம்பாறை பிரதான வீதி அருகில் இன்று சிலர் இனியபாரதியை விடுதலை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது, “பிராந்திய அபிவிருத்தி வேண்டுமாயின் பாரதியை விடுதலை செய்” போன்ற கோஷங்களை ஆர்ப்பாட்டக் காரர்கள் ஏந்தியிருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் வெளி மாவட்டத்தில் இருந்து அழைத்துவரப்பட்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதில் இனியபாரதியின் தாயாரும் கலந்து கொண்டார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்