ஜதேகவிற்கு புதிய தலைமை தேவை:ரணில்!

ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய தலைமைத்துவம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவிக்கின்றார்.
தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியை அடுத்து ஐக்கிய தேசியக் கட்சிக்குள் தற்போது பிளவுநிலை ஏற்பட்டுள்ளது.

கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக கட்சிக்குள் ஓர் அணியும், ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பிரதித் தலைவரும், ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கியவருமான சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவாக இன்னுமொரு அணியும் பிரிந்திருப்பதால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கட்;சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று கட்சி ஆதரவாளர்கள், அமைப்பாளர்களுக்கு நன்றிகூற மாநாடு ஒன்றை ஏற்பாடு செய்த சஜித் பிரேமதாஸவுக்கு சந்தர்ப்பம் கொடுக்கக கட்சியின் உயர்பீடம் தடுத்ததினால் இந்த பிளவுநிலை மேலும் உக்கிரமடைந்துள்ளது.

அத்துடன் கட்சியின் தலைமைப் பதவியை ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கும்படியும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலைமையில் இன்று காலை விசேட ஊடக சந்திப்பை நடத்திய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய தலைமைத்துவம் அவசியம் என்று கூறினார்.
இந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறிகொத்தவும், உறுப்பினர்களும் ஆற்றிய சேவைகளுக்கு நன்றி. சஜித் பிரேமதாசவை வேட்பாளராக முன்மொழிந்து நாம் பணியாற்றினோம். அதற்கமைய சிறிகொத்தவும், எமது உறுப்பினர்களும் பணியாற்றியமையை நான் உறுதிப்படுத்துவோம். இந்த செயற்பாடுகளுக்கு நான் இடைஞ்சல் ஏற்படுத்தியதாக கூறப்படும் விடயத்தை நான் முற்றாக நிராகரிக்கின்றேன். அவ்வாறான எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை. அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் ஒவ்வொரு பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த பொறுப்பை செயற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. நான் வடக்கு கிழக்கு பிரதேசங்களை பொறுப்பேற்று அந்த பிரதேசங்களின் வாக்குகளின் விகிதத்தை நான் அதிகரித்தேன். எனினும் துரதிர்ஷ்டமாக தென் பகுதியில் வாக்குகள் குறைந்தன அது இந்த தோல்விக்கு காரணமாக அமைந்தது. சில இடங்களில் நாம் வெற்றிபெற்றாலும் ஒட்டுமொத்தமாக நான் தோல்வியை சந்தித்தோம். ஒரு புறம் நாம் ஜனநாயகத்தை நிலைநாட்டி, அபிவிருத்தி மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கையும் நிலைநாட்டி, சமூக சேவைகளை நிலைநாட்டுதல் போன்ற விடயங்களில் நாம் எதிர்பார்த்த பிரச்சாரம் எமக்கு கிடைக்கவில்லை. அதனைவிட இந்த கட்சிக்கு சிங்கள, பௌத்த அடிப்படை இல்லாமல் போனமைத் தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறு எமக்கு நடந்ததில்லை. இது தொடர்பில் நாம் சிந்திக்க வேண்டும். இதனை ஆராய்வது அவசியம். இதனை ஆராய்ந்து எமக்கு அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அது தொடர்பில் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். குற்றச்சாட்டுக்களை சுமத்திக்கொண்டிருப்பதால் எதுவும் நடந்துவிடப்போவது இல்லை.

விசேடமாக ,ந்தக் கட்சிக்கோ அதிகாரிகளுக்கோ நிதித் தொடர்பிலான பொறுப்பு காணப்படவில்லை. உண்மையில் நிதித்தொடர்பில் நாம் கையாளவில்லை. அதனையும் நான் நிராகரிக்கின்றேன். இதுத் தொடர்பில் விமர்சினங்கள் காணப்படுமாயின் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென நான் குறிப்பிடுகின்றேன். கட்சியின் எதிர்காலம் தொடர்பில் சிந்திக்க வேண்டும். புதிய தலைவரை நாம் முன்னிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அவருக்கு நாம் புதிய கொள்கையை கைளித்து வெற்றிபெறக்கூடிய தலைவரை உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் அத்துடன் நிறைவடைந்துவிடும். எங்களுக்கு அந்த தலைமையுடன் முன்னோக்கிச் செல்ல எம்மால் முடியும்.

பௌத்தர்களாகிய நாம் ஒரு விடயம் நடந்ததும் கை நீட்டுவது சரியான விடயமல்ல, அதனை புரிந்து, அந்தப் பிழையை நிவர்த்திக்க நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகவே இந்த செயற்பாடுகளுக்கு பௌத்த தேரர்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொண்டு, புதிய ஐக்கிய தேசியக் கட்சியாக முன்னோக்கிச் செல்வோம். என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்