கனகராயன்குளத்தில் நடந்த வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, கனகராயன்குளத்தில் இன்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

சைக்கிளும், மோட்டார் சைக்கியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர். சைக்கிளில் பயணித்த 62 வயதுடையவரே உயிரிழந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார். மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

விபத்து குறிசுட்டககுளம் சந்திக்கு அருகில் நடந்துள்ளது. விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்