ஹற்றன் வெலியோயா பகுதியில் சாதனையாளர்கள் கௌரவிப்பு

ரேடியோ தமிழா Fmஊடக அனுசரணையில் ஹட்டன் வெலியோயா கீழபிரிவு பிரதேசத்தில் சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு ஹட்டன் கோல்டன் கீ விளையாட்டுக்கழக ஏற்பாட்டில் இடம்பெற்றிருந்தது.

பிற்பகல் 03 மணியளவில் பிரதம அதிதியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் ( Joel Melcom ) தெற்காசிய விளையாட்டில் வாள் போட்டியில் மலையக சிங்கப்பெண்ணான செல்வி.பவாணிஶ்ரீயும்,2013 இலங்கையின் பிரபல தொலைக்காட்சியின் குரல் தேடலின் போட்டியில் (ShakthiJuniorSuperstarTiTle Winner) பிரகாஷ், இலங்கையில் பல குறுந்திரைப்படங்களின் இயக்குநரும் நடிகருமான ஆர்கோ ரணில் பிரசாந்த்,கேடிகே(தினேஷ் சாஐன்,சேகர் (மகராசி பாடல் குழுவினர்) மற்றும் பல திறமையுள்ள சிறார்கள்,இளைஞர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தினர் .

இவ் நிகழ்வின் இறுதியில் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

மறுமொழி இடவும்