கல்வியில் தற்கால பிரச்சினைகள்- ஷானுஜா

கல்வியானது மனிதனது அடிப்படைத் தேவைகளில் ஒன்றானதை தொடர்ந்து
சமூகத்தில் அனைவரும் பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது.ஆனாலும்
தற்கால கல்விமுறைமையிலும் கல்வி நடவடிக்கைகளிலும் பாரிய பிரச்சனைகள ;
காணப்படுகின்ற போதிலும் அது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வதென்பது
கேள்விக்குறியான ஓர் விடயமாகவே காணப்பட்டு வருகின்றது. எமது நாட்டைப்
பொறுத்தவரையில் கல்வி தொடர்பான அபிவிருத்தி நடவக்கைகளும் புதியன
புகுத்துதலும் மேற் கொள்ளப்பட்டாலும ; சர்வதேசத்தோடு ஒப்பிடுகின்ற போது போட்டியிட
முடியாத ஓர் கல்வி முறையாகவே காணப்படுகின்றது.

தற்காலத்தில் இலங்கையைப் பொறுத்தவரை முறைசார்ந்த மற்றும் முறைசாராத இரு
சாராரினாலும ; கல்வி போதிக்கப்படுவதுடன் முறைசாராத கல்வி நடவடிக்கைகள்
முறைசார் கல்வியை விஞ்சி செல்கின்ற நிலை தோற்றம பெற்றுள்ளது.
பெரும்பான்மையாக ஏட்டுக்கல்வி முறையே இன்றும் காணப்படுகின்றது இதனால்
மாணவர்கள் மட்டுப்படுத்தப ;பட்ட ஓர் எல ;லைக்குள் தமது கற ;றல் நடவடிக்கைகளை
மேற்கொண்டு வருகின்றனர். இதன் விளைவாக தேடியறியும் தன்மை, கற்பனைவளம்
,தொழில்நுட்ப ஆற்றல் போன்றவை இன்னமும ; வளர்சியடையாமல்காணப்படுகின்றன.

எமது கல்வி முறைமையானது ஆரம ;பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர் கல்வி என
மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டாலும் மூன்று நிலைகளிலுமுள்ள மாணவர்களும்
வௌ;வேறு விதமான கல்வியியற் பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் .ஆரம்ப கல்வி
மாணவர் முதல் உயர்கல்வி மாணவர் வரை ஒவ்வொரும் தமது ஒளிமயமான
எதிர்காலத்தை கருத்திற்கொண்டும் ஓர் இலக்கை நோக்கி பயணிக்கும்
எதிர்பார்போடும் தான் கல்வியை தொடர்கிறார்கள். ஒவ்வொரு மாணவனும்
தற்காலத்தில் கல்வியை தொடர்வதில் உடல்,உள,குடும்ப மற்றும் சமூக ரீதியில்
ஏற ;படுகின்ற பிரச்சினைகளுக்கு முகங ;கொடுப்பதைக் காட்டிலும ; தற்கால கல்வியிலும்
கல்விமுறைமைகளிலும் ஏற்படுகின்ற பிரச்சினைகளை எதிர்கொள்வதே சவால்
மிகுந்ததாக காணப்படுகின்றது.

அந்தவகையிலே ஆரம ;பநிலை கல்வியை தொடரும் மாணவர்கள் எதிர்நோக்கும ;
பிரச்சினைகளை எடுத்து நோக்குகின்ற போது ஆரம்பகல்வியே ஒருவனின ;
எதிர்கிலத்திற்கான அத் திவாரமாகும் ஆனால் எமது கல்விமுறைமையில்
ஆரம ;பநிலைக்கல்வியிலே பிள்ளைகள் பரீட்சைக்கான கல்வியையே கற ;க
தொடங்குகின்றார்கள். தமது திறன்களை இனங்காணவோ அல்லது திறமைகளை
வளப்படத ;தவோ அவர்கள் வழிநடத்தப ;படுவதில்லை. எண்ணறிவு ,எழுத்தறிவு
வளர்க்கப்படுகின்றது. ஆனால் பிள்ளையின் எதிர்காலத ;திற ;கு சிறந்தது எது? என்பது
தொடர்பான அடிப்படை ஊக்கப்படுத்தல் கூட அங்கு இல்லை.

எமது நாட்டை பொறுத்தவரை தரம் 05 புலமைபரீசில் பரீட்சை என்பது பெரிதும்
பேசப்படுகின்ற ஓர் விடயமாகக் காணப்படுகின்றது. இது தொடர்பான கொள்கைகள்
மேற ;கொள்ளபட்டாலும ; நடைமுறையில் மாற ;றம் என்பது நிகழாததாகவே
காணப்படுகின்றது சிறுவயதிலேயே பிள்ளைக்கு கல்வி என்பது சுமை என்பதையும்
கல்வியில் சமத ;துவமில்லை என்பதையும் ஊட்டுகின்ற ஓர் செயற்பாடகவே இப்பரீட்சை
அமைகின்றது.

தொடர்ந்து இடை நிலைக்கல்வி மாணவர்களை எடுத்து நோக்குகின்ற போது அவர்கள ;
இடைநிலைக்கல்வியை தொடர்கின்ற போதே தமது சுய ஆற ;றல் மூலமாக தமது
திறமைகளை அறிய தொடங்குகின்றார்கள் இவ்வேளையில் திறன்களை வளர்க்கவும்
இணைபாட விதான செயற ;பாடுகளில் தம்மை வளர்க்க முயலும் போதும ;
பரீட்சைகளும் போட்டிச்சூழலும் இடையூறாகின்றது. எமது கல்வி முறையானது
துறைரீதீயாக ஒழுங்கமைக்கப்படாத ஓர் முறைமையை கொண்டதாகவே
தென்படுகின்றது. ஏனெனில் தரம் -01 தொடக்கம ; சாதாரண தரம் வரை அனைவரும ;
பொதுவான ஓர் கல்வியை தொடர்வதோடு உயர்தரத்தில் இரண்டரை வருடங்கள ;
மாத ;திரம் தமது விசேட துறையை தேர்ந்தெடுக்கிறார்கள் இதனால் தமது
துறைரீதியான அறிவை பாடசாலைக்கல்வி காலத்தில் போதியளவில் பெற ;றுக்கொள்ள
முடிவதில்லை. இங்கே கல்வியில் சமத ;துவமின்மை என்பது மாணவர்கள ;
எதிர்நோக்குகின்ற பாரிய பிரச்சனை ஆகும ;. மேலும் உயர்கல்வியை தொடர்வதில்
சிக்கல்கள் காணப்படுகின்றன கல்விப் பொதுத ;தராதர உயர்தரப் பரீட்சையில்
சித ;தியடைந்த அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகங்களுக்கோ அல்லது
கல்வியற ; கல்லூரிகளுக்கோ உள்வாங்கப்படுவதில்லை ண புள்ளி அடிப்படையில்
மாவட்ட ரீதியில் முதன்நிலை பெறும் மாணவர்கள் மாத ;திரமே தெரிவு
செய்யப்படுகின்றனர். ஏனையவர்களுடைய உயர்கல்வி சவால் மிகுந்ததாகவே
காணப்படுகின்றது. இலங்கையை பொறுத ;தவரை உயர்தரத்தில் கல்வி கற ;றோரில்

0.82மூமானோரே பல்கலைக்கழக அனுமதியைப் பெறுகின்றனர். பரீட்சையில்
சித ;தியடைந்து 41மூ ஆனோர ; பல்கலைகழம் செல்வதற்கான தகமையை
கொண்டிருந்தாலும் 4.7மூ ஆனோரே பல்கலைக்கழக வாய்ப்பை பெறுகின்றனர் இச ;
செயற்பாடு மாணவர்கள் மத்தியில் ஓர் வெறுப்புநிலையை உண்டாக்குவதாகும்.
உதாரணமாக கடந்த வருடம் 2019 ம் ஆண ;டில் பழைய பாடத்திட்டம் ,புதிய
பாடத்திடம் ஆகிய இரண்டிலுமே மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி பல்கலைக்கழக
வாய்ப்பை பெறுகின்ற போது சிறந்த பெறுபேற ;றை பெற்றும் மாவட ;ட
முதன்நிலைகளினுள் தெரிவாகியும் பல்கலைக்கழக தெரிவிற்குள் தவறவிடப்படுகின்ற
ஓர்சூழ ;நிலை உருவாகும். இத்தகைய செயற்பாடுகள் மாணவர்களின்
தன்னம்பிக்கையை இழக்கச்செய்வதோடு சலிப்பு தன்மையை ஏற்படுத்துகின்றன.

தொடர்ந்து பாடாசாலைக்கல்விக்கும் பல்கலைக்கழ மற்றும் தொழில்நிலைக்கல்விக்கும்
இடையே மிகப்பெரிய கால இடைவெளி ஒன்று காணப்படுகின்றது.உயர்தரப்பரீட்சை
எழுதிய மாணவர்கள் பரீட்சைப் பெறுபேறு கிடைத்த பின்னர் அண்ணளவாக ஒரு
வருடத்திற ;கு மேல ; தமது பட்டப்படிப்பை தொடர காத்திருக்கிறார்கள். இன்றைய நவீன
சூழலில் ஒரு நிமிடம் வீணடிப்பதையே நாம் வரும்புவதில்லை. ஆனால் எமது
நாட்டைப் பொறுத ;தவரை கற்றலுக்ககாக ஒரு வருடம ; வீணடிக்கப்படுகின்றது.

மேலும்நமது நாட்டை பொறுத்தவரையில் சிங்களம ;, தமிழ், ஆங ;கிலம் போன்ற மும ;
மொழியிலும் மாணவர்கள் தேர்ச்சியடைந ;திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்
ஆனால் பெரும்பான்மையான பாடசாலைகளில் மும ;மொழி அடிப்படையிலான கல்வி
நடவடிக்கைகள் இல்லை. மூன்று பாடங்களும் பாடத்திட்டத ;தினுள்
கொண்டுவரப்பட்டாலும ; மொழியை ஊடாகமாக கொண்ட கற ;றல் நடவடிக்கைகள ;
இல்லை. மாணவர்கள் பாடசாலைக்கல்வியை தமது தாய்மொழிகளில் கற ;று
தேர்ச்சியடைந்த பின்னர் பல்கலைக்கழகங்கள் மற ;றும் உயர்கல்வி நிறுவனங்களில்
தமது பட்டப்படிப்பை கட்டாயம ; ஆங ;கில மொழியில் தொடரவேண்டும ; என்ற நிலை
ஏற ;படுவதனால் கற ;றலை சுமூகமாகவும் போதிய விளக்கத்துடனும்
பெற ;றுக்கொள்வதென்பது பாரிய ஓர ; பிரச்சனையாகும். இதற ;கு பிரதான காரணம ;
அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழியை ஊடகமாக கொண்ட கற்றல்
நடவடிக்கைகள் மேற ;கொள்ளப்படாமை ஆகும்.

பொதுவான எமது கற்றல் முறைமையானது எதிர்கால கல்வியோடு
பொருத ;தப ;பாடுடையதாக அமையவில்லை. எமது கல்விமுறைமை வரையறுக்கப்பட்ட
பாடத்திட்டத ;தோடு பரீட்சையை மையப்படுத்தியதாகவே காணப்படுகின்றது. தற்கால
தொழிநுட்பத்தோடு ஒன்றித்ததாகவோ அல்லது தொழிற்துறை சார்ந்ததாகவோ இல்லை.
இதன் விளைவாகவே பட்டப்படிப்பின் பின்னரும் வேலை வாய்ப்பு என்பது பலருக்கு
எட்டாக் கனியாகவே உள்ளது. கல்வியில் ஓர் நிறைவை அடைந்த பின்னரும்
எதிர்காலம் கேள்விக்குறியாகின்ற போது வாழ ;நாள் அரைப்பகுதி கற ;றலுக்காக
செலவிடப்பட்டது பிரியோசனமற ;ற செயற்பாடகவே எண்ணத் தோன்றுகின்றது.

இன்று உலகளாவிய ரீதியில் கல்வி கற ;கும் முறைமைகள் எமது கற ;பனைக்கு
அப்பாற்பட்ட அளவு மாற ;றத்தை கண்டுள்ளது. திறன்பேசிகள், கணினிகள்,
மடிக்கணினிகள், இணையம், தொலைத்தொடர்பு சாதனங்கள், டிஜிட்டல்
மயப்படுத்தப ;பட்ட எண ;முறையான கற்றல் உபகரணங ;கள் போன்ற பல்வேறுபட்ட
விதங்களில் வளர்ச்சி கண்டுள்ள சர்வதேச கற ;கை முறைமைகளோடு ஒப்பிடுமிடத்து,
இலங்கை இன்று இருக்கின்ற நிலை மிகவும ; பின்தங ;கியே உள்ளது என்பதில்
ஐயமில்லை.

கல்வி முன்னேற்றத ;தை டிஜிடல்மயப ;படுத ;துகின்ற செயல்முறையானது, மூன்று
படித்தரங்களைக் கொண்டிருக்கின்றது.
முதலாவது – ஏஊசுஇ தொலைக்காட்சிகள் போன்ற ஓடியோ – வ Pடியோ கருவிகள்,
ஊனு-சுழுஆ, குறைந்த வேக இணைய தொடர்புகள், கணினி விகிதத ;திற ;கு அதிகமான
மாணவர் மற ;றும் தேவையான தகவல் தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட இரண்டு
ஆசிரியர்கள் போன்றவற்றையும்,
இரண்டாவது – மல ;டிமீடியா புரொஜக்டர்கள், அதிவேக இணைய தொடர்புகள், கணினி
விகிதத ;திற ;கு குறைந்த மாணவர் போன்ற மிகவும ; முன்னேற்றகரமான கருவிகள்
மற ;றும் தகவல் தொழில்நுட்ப அறிவு கொண்ட போதியளவு ஆசிரியர்கள் எனவும ;
இறுதிப் படித்தரம், ஆசிரியர் முன்னெடுப்பு கல்வி அல்லாது மாணவர் வழிநடாத ;தும்
கல்வியாகவும் இனங்காணப்படுகிறது. ஆனால் இலங்கை இன்றும் முதற்
படித்தரத்தையே பூரணப்படுத்தவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகவே
காணப்படுகின்றது.

எமது கல்வி முறையானதாக இருந்தால் எமது நாடு பொருளாதார ரீதியிலும்
அபிவிருத ;தியடைய தொடங்கிவிடும ; எமது கல்விமுறைமை தொழில் வாய்பிற்கு
ஈடுகொடுக்க கூடியதாக இருந்தால் கற ;றவர்கள் தெருவில் நிற்கவோ அல்லது
மூளைசாலிகள் வெளியேற்றம் ஏற ;படவோ அல்லது வேற்று நாடுகளிடம் கையேந்தவோ
அல்லது எமது நாட ;டு வளங ;களை நாம் பயன்படுத ;தாது வேற்றுநாடுகளிடம் ஒப்பந்தம ;
அளிக்கவேண்டிய அவசியம் இல்லை.

கல்வியில் உள்ள தற்கால பிரச்சனைகளை கருத ;திற ; கொண்டு எமது நாட்டு
வளங்களை பூரணமாக பயன்படுத்தும் வகையில் தொழிற்வாய்பிற்கு ஈடுகொடுக்க
கூடிய வகையிலும ; தொழில்நுட்ப அறிவோடும் சர்வேதச கல்வி முறைகளோடு
போட்டியிட கூடிய வகையிலும் கல்விமுறைகள் மற ;றும் கொள்கைகளை
த Pர்மானிப்பதனூடாக நிச்சயம ; சிறந்த ஓர் நாட்டை கட்டியெழுப்ப முடியும்.

ஷானுஜா புவனேஸ்வரன்
2ம் வருட சிறப்புக்கற்கை மாணவி
கல்வி பிள்ளை நலத்துறை
கிழக்குப்பல்கலைக்கழகம்

மறுமொழி இடவும்