மணி தொடர்ந்து உறுப்பினராக இருக்க முடியும்

மணிவண்ணன் தொடர்பில் நாங்கள் 3 மணி நேரம் விவாதித்தோம். தமிழ்த் தேசிய முன்னணியின் மத்திய குழு உறுப்பினர்களில் மூவர் மணிவண்ணனை
கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தார்கள்.

ஏனையவர்கள் மணிவண்ணனை கட்சியில் இருந்து நீக்கலாம் என்பதற்கு அப்பால் அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே பேசியிருந்தார்கள்.

எங்களுடைய கட்சியைப் பொறுத்தவரையில் விடயங்களைப் பேசித் தான் முடிவெடுக்கிறோம். நான் ஒரு கருத்தை சொல்லும்போது அதை கண்ணை மூடிக்கொண்டு எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எங்கள் கட்சி இல்லை.

அனைவரும் பேசி எடுத்த முடிவை கட்சிக்குள்ளேயே விமர்சித்து கட்சிக்குள் அணிகளை உருவாக்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது. மணிவண்ணன் அந்தக் கோணத்தில் செயற்பட்டது தான் எங்களுக்குப் பிரச்சினை.

விருப்பு வாக்குப் பிரச்சினை இல்லை. சுகாசுக்கும் மணிவண்ணனுக்கும் விருப்பு வாக்கு விடயத்தில் இருவருக்கும் பிரச்சினை இருந்தது உண்மை.

மணிவண்ணன் கூறுகிறார் தன்னுடைய செல்வாக்கை வளர்த்துவிட்டேன் அதனால் கஜேந்திரனுக்கு அது போட்டி என்பதால் தனக்கு எதிராக பரப்புரைகளைச் செய்கிறார் என்று.

மணிவண்ணனுக்கும் சுகாசுக்கும் 800 வாக்குகள் தான் வித்தியாசம். அப்படி என்றால் கஜன் சுகாசுக்கு எதிராகவும் கதைத்திருக்க வேண்டும்.

மணி வந்து கஜேந்திரனுக்கும் சுகாசுக்கும் எதிராக பொய்யான பரப்புரைகளை மேற்கொண்டுள்ளார். இவர்கள் தான் மணிவண்ணனை தோற்கடிக்கப் பார்க்கிறார்கள் என்ற கோணத்தில் பொய்யான பரப்புரைகளைப் பரப்பி, கொள்கை சார்ந்து பிரச்சினை கட்சிக்குள் இருக்கிறது அதனை சரியான வகையில் முகம் கொடுக்கவில்லை என்ற உண்மையை மறைத்து. அந்த இடைவெளியை குறைக்க எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்காமல் மாறாக தன்னுடைய வெற்றியை உறுதிப்படுத்துவது தான் தேர்தல் காலத்தில் இடம்பெற்றது.

அதன் இப்போது கஜனும் நானும் தன்னுடைய வளர்ச்சியை சகித்துக்கொள்ள முடியாத நிலையில் அவருக்கு எதிரான நடவடிக்கையை எடுகிறார்கள் என்ற விடயத்தை நேற்று கோப்பாயில் நடைபெற்ற கூட்டத்தில் மணி பேசியிருக்கிறார்.

நான் என்னத்தைச் சொல்ல வாறன் என்றால் தேசிய அமைப்பாளர் என்ற பதவியை வைத்துக்கொண்டு கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திக்கொண்டு கொள்கைக்கு மாறாக தனக்கொரு அணியை பலம் சேர்க்கிற நிலையில் அவருக்கு இப்பதவியை தொடர்ந்து வழங்குவது ஆபத்தானது.

நாங்கள் அவருக்குப் பதவி கிடையாது. ஆனால் அவர் தொடர்ந்தும் உறுப்பினராக இருக்க முடியும். அவர் எதிர்காலத்தில் கட்சியில் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதைப் பொறுத்தே எமது முடிவுகள் இருக்கும் என்றார் கஜேந்திரகுமார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்