இலங்கைத்தீவுக்கு வருகிறார் அமெரிக்க உயர் அதிகாரி

அமெரிக்காவின் உதவிச் செயலாளரும், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான சிறப்புப் பிரதிநிதியுமான அலைஸ் ஜி வெல்ஸ் இலங்கைக்கு அடுத்த வாரம் வருகை தரவுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆசிய நாடுகளுக்குப் பயணிக்கும் அவர் இலங்கைக்கும் வருகை தரவுள்ளார் என்று அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் அவர், நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரசின் உயர் மட்டப் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் வர்த்தகர்களைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன் கொழும்பில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்து சமுத்திர மாநாட்டில் அவர் பங்கேற்பார்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆகிய நாடுகளுக்கும் அவர் பயணிக்கவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்