பொலிஸ் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்ந்தும் கைதுசெய்யப்படுவர்:பிரதிப் பொலிஸ் மா அதிபர்

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் சட்டவிரோத மணல் கடத்தியமை மற்றும் பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல் மேற்கொண்டமை போன்ற குற்றச் செயல்களோடு சம்மந்தப்பட்ட எவரையும் கைது செய்யாது ஓயப்போவதில்லை என்று வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ சூழுரைத்துள்ளார்.

வடமராட்சியில் அண்மையில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து பொலிஸாரினது வாகனம் மற்றும் பொலிஸ் காவலரண் என்பன மக்களால் அடித்து நொருக்கப்பட்டிருந்தன. இதனால் இந்தச் சம்பவங்களுடன் தொடர்புபட்டார்கள் எனத் தெரிவித்து இதுவரை 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் சம்மந்தப்பட்டவர்களை இந்தத் தடவை மாத்திரம் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு மக்களால் கோரிக்கை வைக்கப்பட்டபோதும் அதற்கான அதிகாரம் தமக்கு இல்லை என்றும் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது என்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்த அவர், துப்பாக்கிச் சூடு நடத்திய காரணத்துக்காக இரண்டு பொலிஸாரைக் கைது செய்துள்ளோம், அதே போல் பொலிஸ் வாகனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொண்டோரையும் கைது செய்துள்ளோம். இன்னும் இதனோடு சம்மந்தப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ள 100 பேரில் 34 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். வெளியில் உள்ள அனைவரையும் கைது செய்தே தீருவோம். ஏனெனில் சட்டம் என்பது அனைவருக்கும் சமமானது.

ஆனாலும் முன்னரைப்பொன்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தத்தக்க வகையில் சுற்றிவளைப்புக்கள் மூலம் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படமாட்டாது. மேலும் கைது செய்யப்பட்டவர்களை சாதாரணமாக விடுவிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை. யாராவது தவறு செய்யவில்லையாயின் அது தொடர்பாக நீதிமன்றத்தில் கூற முடியும், அது தொடர்பாக நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று மேலும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்