படகு கவிழ்ந்து விபத்து மண்டைதீவு கடலில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு!(காணொளி)

யாழ்.மண்டைதீவு கடலில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

க.பொ.த.உயர்தரம் பரீட்சை நிறைவடைந்ததையடுத்து மாணவர்கள் குழுவொன்று மண்டைதீவு கடல்பகுதியில் படகு மூலம் சுற்றுலா சென்றுள்ள போதே படகு மூழ்கி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சில மணிநேரங்களுக்கு முன்  5 மாணவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரை தேடிவருவதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் 6 வது மாணவனின் உடலம் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட மாணவர்களின் உடல்கள் யாழ் போதனா வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது.

படகு கவிழ்ந்து விபத்து மண்டைதீவு கடலில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு!(3ஆம் இணைப்பு)http://eeladhesam.com/?p=2473

Posted by Eeladhesam News on Montag, 28. August 2017

ஈழதேசம் இணையத்திற்கா தாயகத்தில் இருந்து மு.காங்கேயன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்