வடமராட்சியில் யானை தாக்கி ஒருவர் பலி!

வடமராட்சி, வத்திராயன் பகுதிக்குள் வன்னிப் பகுதிக் காட்டில் இருந்து வந்த யானை புகுந்தது. அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவர் படுகாயமடைந்தார். 50 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடல் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மக்கள் குடியிருப்புப் பகுதிக்குள் நீண்டகாலத்தின் பின்னர் யானை புகுந்துள்ளதாலும், அதன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாலும் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் அச்சத்துடன் உள்ளனர் என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

பொலிஸார், இராணுவத்தினர், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் யானையைக் கட்டுப்படுத்தி விரட்டுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்