டென்மார்க்கில் கரும்புலிகள் ஞாபகார்த்தமாக நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி

தமிழீழ விடுதலைப்போராட்ட வரலாற்றில் 1987 ஆம் ஆண்டு யூலை மாதம் 5 ஆம்நாள் கரும்புலி கப்டன் மில்லரின் தாக்குதலுடன் கரும்புலிகள் சகாப்தம் தொடங்கி வைக்கப்பட்டது .

நெல்லியடி மத்திய மகாவித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த சிறிலங்கா இராணுவத்தினர் மீது மில்லர் கரும்புலி தாக்குதல் நடத்தி 30 ஆண்டுகள் கடந்து விட்டன.

தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஒவ்வொரு திருப்பு முனைகளிலும் கரும்புலிகளின் வீரவரலாறு உள்ளது.அவர்களின் ஒரே மூச்சு, சுதந்திரமான தமிழீழ தேசம். அதற்காக இவர்கள் வெடிகள் சுமந்து சென்று வீரவரலாறு படைத்தார்கள்.கரும்புலிகளின் தியாகங்கள் சொல்லில் அடங்காதவை.

அவர்களின் நினைவாக உதைபந்தாட்டப் போட்டி Vejle நகரில் 26.08.17 அன்று நடைபெற்றது . நிகழ்வின் முதல் நிகழ்வாக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்பு மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு,மலர்வணக்கம் செலுத்தப்பட்டு அகவணக்கத்துடன் நிகழ்வு ஆரம்பமானது.

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் பல விளையாட்டு கழகங்கள் பங்குபற்றின.இளம் விளையாட்டு வீரர்கள் மிகவும் ஆர்வத்துடன் விளையாட்டில் பங்கு பற்றியதை காணக்கூடியதாக இருந்தது. போட்டியில் வெற்றி பெற்ற அனைத்து வீரர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்கப்பட்டன. உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது ” தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்” என்ற தாரகமந்திரத்துடன் நிறைவு பெற்றது.

உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்

முதலாம் இடம் Drammen நோர்வே

இரண்டாம் இடம் Dantam

மூன்றாம் இடம் GTFC

சிறந்த விளையாட்டு வீரன் அஜந்தன் Drammen நோர்வே

சிறந்த பந்து காப்பாளர் சாருசன் Drammen நோர்வே

தொடர்டர்புடைய செய்திகள்
2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர்
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள்

About இலக்கியன்

மறுமொழி இடவும்