திண்மக்கழிவு அகற்றலுக்கு எதிரான போராட்டம்!

மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை கொட்ட வேண்டாம் எனக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கொத்துக்குளத்து மாரியமன் ஆலயத்திற்கு முன்னால் வீதியில் திண்மக் கழிவுகளை கொண்டு செல்லும் வாகனங்களை தடுத்து நிறுத்தி குறித்த ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் குடியிருப்பு உள்ள பகுதியை அண்டிய பிரதேசத்தில் மட்டக்களப்பு மாநகர சபையினால் அகற்றப்படும் திண்மக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகின்றன.

இதனையடுத்து ஆர்ப்பாட்ட இடத்திற்கு ஜக்கிய தேசிய கட்சியின் மாவட்ட இணைப்பாளர் வே. மகேஸ்வரன். கிழக்கு மாகாண சபை பிரதி தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா ஆகியோர் வருகை தந்து மக்களின் நியாய பூர்வமான போரட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

அதேவேளை இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டு மாவட்ட இணைப்பாளர் ஏ.அசீஸ் அங்க வந்து உடனடியாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளை ஆணைக்குழுவின் காரியாலயத்திற்கு வரவழைத்து விசாரணை மேற்கொள்வதாக வாக்குறுதியளித்தார்.

இருந்தபோதும் ஆர்ப்பாட்டகாரர்கள் தமக்கு உரிய அதிகாரிகள் உத்தரவாதம் தரும் வகையில் போராட்டம் தொடர்ந்து இடம்பெறும் என தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த மாதம் இக் குப்பைமேடு தீப்பற்றி எரிந்தது. இதனை விமானப்படை மற்றும் தீயணைப்பு படையினர் இரண்டு நாட்களின் பின்னர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் இக் குப்பைமேடு நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை மீண்டும் தீப்பற்றி எரிந்து வருகின்றது. இதனால் அதில் இருந்து வெளியேறும் புகை மற்றும் அக்கழிவுகளில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் போன்ற பல்வேறு அசௌகரியங்களை மக்கள் அனுபவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்