வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் – விமல்

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. அங்கு சரியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இவ்வாறு தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.

கேகாலையில் நேற்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்தாவது-

புதிய நீதி அமைச்சரின் உதவியுடன் கூட்டு எதிரணியின் 10 உறுப்பினர்களை கைதுசெய்ய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உள்ளுராட்சி மன்ற தேர்தல்களை நடத்துவதற்கு முன்னர் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நாட்டை கடன் சுமையில் தள்ளிவிட்டார் என்று தெரிவித்துக் கொண்டு நாட்டின் தலைமை அமைச்சர் ரணில் விக்ரமசிங்க உலகை வலம் வருகின்றார். – என்றார்.

தொடர்டர்புடைய செய்திகள்
ரணிலிற்கு பிரதமர் பதவியை வழங்கிய பின்னர் இலங்கை ஜனாதிபதி மைத்திரி ஆற்றிய உரை கடுமையான் வரவேற்பினை சிங்கள மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவினால் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பிலான சபையின் தீர்மானம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன்
வடக்கு, கிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, முதற்கட்டமாக 28 ஆயிரம் வீடுகளை அமைக்கும் பணி இந்தியாவிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு சிறிலங்கா

About இலக்கியன்

மறுமொழி இடவும்