சரத் பொன்சேகாவின் வீட்டு வேலைகளுக்கு முன்னாள் போராளிகள்!

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக முன்னாள் போராளிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டின் கட்டட வேலைக்கான உதவியாளர்களாக பணியாற்ற வந்தவர்களில் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நான்கு பேர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நாராஹென்பிட்டி ஹிங் எல பிரதேசத்தில் மேற்படி காணி அமைந்துள்ளது.

இதேவேளை சரத் பொன்சேகாவின் வீட்டை புகைப்படம் எடுத்தமைக்காக நுவரெலியா, லிந்துலை பிரதேசத்தை சேர்ந்த இரண்டு தமிழ் இளைஞர்களை நாராஹென்பிட்டி பொலிஸார் அண்மையில் கைது செய்தனர். இவர்கள் நாவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றில் தொழில் புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்