வயல்நிலங்களுக்கான பாதை சீரின்மை. செம்மலை மக்கள் வருத்தம்.

புளியமுனையில் காணப்படும் தமது வாழ்வுடைமை நிலங்களுக்கான வழியானது சீரற்று காணப்படுவதாக செம்மலை ஊர் மக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
உப உணவுப்பயிர்ச்செய்கைக்காக புளியமுனைக்குச்செல்வதற்கான குறித்த சீரற்ற வழியினை இன்று வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்களையும் அழைத்து காண்பித்தனர்.

இது தொடர்பில் ரவி கரன் அவர்கள் கருத்துத்தெரிவிக்கையில்,

செம்மலை மக்களுக்குரிய வாழ்வுடைமைநிலங்கள் புளியமுனைப்பகுதியில் உள்ளது. இந்நிலங்களில் உப உணவுப் பயிர்ச்செய்கையை அவர்கள் செய்து வருகின்றார்கள்.

இதற்குரிய பாதையாக நாயாற்று வழியாக சென்று முன்பு பயிர்ச்செய்கை செய்து வந்தார்கள். இது மிகவும் கூடியளவிலான தூரமாகும். செம்மலையிலிருந்தான மிகவும் குறுகிய வழியானது ஏற்கனவே தொடர்புடையை பணியாளர்களுக்கு காண்பிக்கப்பட்டு சிறிய தூரத்திற்குப்பாதையும் போடப்பட்டுள்ளது.

இருந்தும் மிகுதி வேலைகள் பணியாளர்கள் வந்து பார்வையிட்டும் இன்னும் சீராகவில்லை என மக்கள் முறையிடுகின்றார்கள். ஆயிரம் பாலத்திட்டத்தில் இப்பகுதிக்கும் வாய்ப்பு இருந்ததாகவும் பின்னர் அது கைகூடவில்லை எனவும் தெரிவிக்கின்றனர். தங்களுடைய இடர்நிலையை நேரில் வந்து பார்வையிடும்படி தெரிவித்ததற்கமைய 2017.08.29ஆம் நாளாகிய இன்று நேரில் சென்றேன்.

கூடியளவிலான மக்கள் நின்று பாதை சீராக்கலுக்கான வேலையை செய்து கொண்டிருந்தனர். அவர்களோடு உரையாடியும் குறித்த இடங்கள் மற்றும் சிறிய பாலம் அமைக்கும் இடத்தையும் பார்வையிட்டேன். உரியவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டு இயன்றவற்றை செய்து தருவேன் என்று மக்களிடம் தெரிவித்து விடைபெற்றேன் என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்