போதைப் பொருளை விழுங்கி வந்தவர் கட்டுநாயக்கவில் சிக்கினார்!

போதைப் பொருளை உருண்டைகளாக தயாரித்து விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் இருந்து வந்த குறித்த நபரிடம் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்தே அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் 21 போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேகநபரை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையை அடுத்து உருண்டைகள் வெளியில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த, பாகிஸ்தான் பிரஜை தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்