காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்ததுடன், பேரணி ஒன்றினையும் மேற்கொண்டனர்.

வடக்கு, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான குரல் அமைப்பின் ஏற்பாட்டில் வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதுடன், அதன் பின் ஏ9 வீதி வழியாகச் சென்ற பேரணி 188 ஆவது நாளாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம் மேற்கொள்ளப்படும் இடத்திற்குச் சென்று, அங்கிருந்து வவுனியா நகரசபை மண்டபத்தை வந்தடைந்தது.

IMG_2417ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ எங்கே எங்கே எமது பிள்ளைகள் எங்கே, நல்லாட்சி அரசே காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, இனப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வைத்தா, அரசே இனியும் காலத்தை கடத்தாதே’ உள்ளிட்ட கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

IMG_2379இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர்களான ம.தியாகராசா, இ.இந்திரராசா, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் செ.மயூரன், அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், சி.ஆ.ஜோதிலிங்கம், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்