எடப்பாடி மற்றும் பன்னீர்செல்வம் பதவி விலகினால் மட்டுமே சர்ச்சை முடிவுக்கு வரும் – தினகரன்

ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பதவி விலகினால்தான் விவகாரம் முடிவுக்கு வரும் என டிடிவி தினகரன் உறுதியாக கூறி உள்ளார்.

விஷால் உடனான சந்திப்பில் எவ்விதமான அரசியலும் இல்லை. மக்களுக்கு சேவையாற்ற யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் , விஷால் வந்தால் மகிழ்ச்சி. பேச்சு சுதந்திரத்தை முடக்க தமிழக அரசு நினைக்கிறது. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்கள்.

கட்சியில் தொடர்ந்து செயல்படாமல் இருப்பவர்கள், நீக்கப்படுவார்கள். நாஞ்சில் சம்பத்தின் பேச்சு சுதந்திரத்தை முடக்க தமிழக அரசு முயற்சிக்கிறது

எந்த ஆதாயத்திற்காகவும் நாங்கள் கோரிக்கை விடுக்கவில்லை. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் பதவி விலகினால்தான் விவகாரம் முடிவுக்கு வரும். தாமாகவே பதவி விலக வேண்டும் என்பதற்காக முதலமைச்சருக்கு அவகாசம் கொடுத்துள்ளோம். துரோகம் செய்தது யாராக இருந்தாலும் அவர்களை நாங்கள் விட்டுவிட மாட்டோம். தொண்டர்களை பற்றி கவலைப்படாமல் முதலமைச்சர் பழனிசாமி செயல்பட்டு வருகிறார்.பதவி, சுயலாபத்திற்காக செயல்படும் பழனிசாமி, தமிழக மக்களுக்கு எப்படி நல்ல முதலமைச்சராக இருக்க முடியும்.

ஊழல் ஆட்சி என கூறிய பன்னீர்செல்வத்துடன் கைகோர்த்துள்ளனர். சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் அணியில் உள்ள ஸ்லீப்பர் செல்கள் விரைவில் வெளிவருவார்கள்.பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் பொதுச்செயலாளருக்கே உள்ளது . முதலமைச்சரை மாற்ற வேண்டும் என்பதே எம்.எல்.ஏக்களின் கோரிக்கை. மத்திய அரசுக்கு தவறான தகவல்களை கொடுத்து கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்