அனைத்துலக காணாமல்போனோர் தினத்தன்று பிரான்சில் இடம்பெற்ற கவனயீர்ப்புப் போராட்டம்!

தமிழர் தாயகத்தில் கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி அங்கு நடைபெறும் போராட்டங்களுக்கு வலுச்சேர்க்கும் முகமாக அனைத்துலக காணாமல் போனோர் தினமான நேற்று (30.08.2017) புதன்கிழமை பிரான்சு பாராளுமன்றத்திற்கு அருகில் மாலை 3 மணி முதல் கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பதாதைகள், பதாகைகள் மற்றும் புகைப்படங்கள் போன்றவற்றை ஏந்தியவாறு மக்கள் கலந்துகொண்டிருந்தனர்.

பிரான்சில் நேற்று சீரற்ற காலநிலை நிலவியபோதும் அதற்கு மத்தியில் நின்று தமது உணர்வுகளை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரெஞ்சு மொழியில் எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கமளிக்கப்பட்டதுடன் உரைகளும் இடம்பெற்றன.
தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் என்னும் தாரகமந்திரத்துடன் மாலை கவனயீர்ப்பு நிகழ்வு நிறைவடைந்தது. வெளிநாட்டவர்கள் பலரும் எமது போராட்டத்தின் நோக்கம் பற்றி கேட்டறிந்ததைக் காணமுடிந்தது.

(ஊடகப்பிரிவு – பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு)

About இலக்கியன்

மறுமொழி இடவும்