வவுனியாவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் கேரளா கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை 5.45 மணியளவில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கிளிநொச்சியிலிருந்து வவுனியாவிற்கு எடுத்துச் செல்லப்பட்ட 2 கிலோகிராம் கேரளா கஞ்சாவினை வவுனியா மத்திய பேருந்து நிலையத்தில் நபரொருவர் வைத்திருந்த நிலையில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் கிளிநொச்சியை சேர்ந்த 39வயதுடைய குடும்பஸ்தர் ஆவார்.

விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, அண்மைய நாள்களில் வவுனியா பேருந்து நிலையத்தில் தொடர்ச்சியாக கேரளா கஞ்சா பிடிபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்