காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தில் பிரித்தானிய பிரதமர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு 30.08.2017 புதன்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் இந்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறுள்ளது.

இதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் செயற்பட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.

இன் நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் மற்றும் சுலோகங்கள் அடங்கிய அட்டைகளை கைகளில் தாங்கியவண்ணம் போராட்டதில் ஈடுபட்டனர்.

இதன்போது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் கோரிக்கை மனு ஒன்றும் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

செய்தி மற்றும் புகைப்படங்கள் ஈழதேசம் இணையத்தள பிரித்தானிய செய்தியாளர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்