யானை தாக்கி ஒருவர் பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி காவல் துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் யானை தாக்கி ஒருவர் நேற்று (01) உயிரிழந்துள்ளார். வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம் வயது(62)என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல் துறை தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ,சம்பவம் தொடர்பில் வெல்லாவெளி காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்