தமிழருக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் வரை இந்தியா அழுத்தம் கொடுக்குமாம்!

இலங்கைத் தமிழருக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்வரை இந்தியா தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்குமென இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் உறுதியளித்துள்ளார். அத்துடன் இலங்கைத் தமிழர்களை இந்தியா ஒருபோதும் கைவிடாது எனவும் உறுதியளித்துள்ளார்.

கொழும்பில் ஆரம்பமான இந்தியப் பெருங்கடல் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கொழும்பு வந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், நேற்று முன்தினம் மாநாடு நிறைவடைந்த பின்னர் எதிர்க்கட்சித் அலுவலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இச்சந்திப்பில் இரா.சம்பந்தனுடன் சுமந்திரனும் கலந்துகொண்டார்.

இந்தச் சந்திப்பில் புதிய அரசமைப்பு, ஐ.நா. தீர்மானம் மற்றும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பில் இரா.சம்பந்தன் எடுத்துரைத்தார்.

சந்திப்பின் நிறைவில் இலங்கைத் தமிழர்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டை சுஷ்மா சுவராஜ் தெளிவுபடுத்தினார். இந்தச் சந்திப்பில் சுஷ்மா சுவராஜுடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் எஸ்.ஜெய்சங்கர் சிறிலங்காவிற்கான இந்தியத் தூதுவர் தரண்ஜித் சிங் சந்து ஆகியோரும் பங்கேற்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்