அனிதா தற்கொலையால் மாணவர்கள் கொந்தளிப்பு.. மெரினாவில் போலீஸ் குவிப்பு!

அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டதால், தமிழகம் முழுக்க மாணவர்கள் போராட்டம் நடத்த தயாராகி வருவதாக செய்திகள் பரவியுள்ளதால் சென்னை மெரினா கடற்கரையில், போலீஸ் பாதுகாப்பு கூடுதலாக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள குழுமூர் கிராமம் அனிதாவின் சொந்த ஊர். அனிதாவின் தந்தை சண்முகம், திருச்சி காந்தி மார்க்கெட்டில் மூட்டை தூக்கும் தொழில் செய்துவருகிறார்.

பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்.. எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார் அனிதா? பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்.. எத்தனை கனவுகளோடு இருந்திருப்பார் அனிதா?

ஏழ்மைக் குடும்பத்தைச் சேர்ந்த அனிதா ப்ளஸ் டூ தேர்வில் 1176 மதிப்பெண் பெற்றார். அதில் கட்-ஆஃப் மதிப்பெண் 200க்கு 196.7. நீட் தேர்வு எழுதிய அனிதாவின் கட்-ஆஃப் 700க்கு 86 மதிப்பெண் மட்டுமே கிடைத்தது.

அதனால் மாணவி அனிதா மனம் நொந்த நிலையில் இன்று அவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதனால் தமிழகம் முழுக்க திர்ச் ஏற்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளுக்கு தமிழகம் முழுக்க எதிர்ப்புகள் பெருகி வருகின்றன.

இந்த நிலையில், ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த மெரினா கடற்கரையில் மீண்டும், பெரிய அளவுக்கு போராட்டம் நடந்துவிடும் என போலீசார் மத்தியில் பரபரப்பு ஓடுகிறது.

மாணவர்களை மெரினா நோக்கி திரள சமூக வலைத்தளங்கள் மூலமாக அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளதால் மெரினாவில், விவேகானந்தர் இல்லம் சுற்றிய பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்