புதிய அர­ச­மைப்­புக்கு எதி­ரான போரை வழி­ந­டத்­து­வார் கோத்தா

புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் முயற்­சி­யில் கூட்டு அரசு ஈடு­பட்­டுள்ள நிலை­யில், அத­னைத் தோற்­க­டிப்­ப­தற்­கான பரப்­பு­ரைப் போரை முன்­னாள் பாது­காப்­புச் செய­லா­ளர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே நேர­டி­யா­கக் கள­மி­றங்கி வழி­ந­டத்­து­வார்.

இதற்­காக ‘எலிய’ (வெளிச்­சம்) எனும் சிவில் அமைப்­பொன்றை உரு­வாக்­கி­யுள்ள அவர், எதிர்­வ­ரும் 6ஆம் திகதி முதல் அதன் செயற்­பாட்டை உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக ஆரம்­பிக்­க­வுள்­ளார்.

அமைப்­பின் அறி­முக நிகழ்வு மிகப் பெரி­ய­ள­வில் பொர­லஸ்­க­மு­வை­யில் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்­குத் தலைமை தாங்­கு­மாறு தனது சகோ­த­ர­ரான முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு, கோத்­த­பாய அழைப்பு விடுத்­துள்­ளார்.

இலங்கை மத்­திய வங்­கி­யின் முன்­னாள் ஆளு­நர் அஜித் நிவாட் கப்­ரால், முன்­னாள் இரா­ஜ­தந்­தி­ரி­யும் அர­சி­யல் விமர்­ச­க­ரு­மான தயான் ஜய­தி­லக, இரா­ஜ­தந்­தி­ரி­யான தாமரா குண­நா­ய­கம், முன்­னாள் தலைமை நீதி­ய­ர­சர் சரத் என் சில்வா உட்­ப­டப் பல்­து­றை­க­ளி­லும் உயர் பத­வி­களை வகிப்­ப­வர்­கள் வெளிச்­சம் அமைப்­பின் அங்­கத்­த­வர்­க­ளாக உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­னர்.

புதிய அர­ச­மைப்­பொன்று உரு­வாக்­கப்­ப­டு­மாக இருந்­தால் பொது வாக்­கெ­டுப்பு நடத்­தப்­ப­ட­வேண்­டும் என்­பதே அர­சின் நிலைப்­பா­டாக இருக்­கின்­றது. அதைத் தோற்­க­டிப்­பதே இந்த அமைப்­பின் முதன்மை நோக்­க­மா­கும்.

எதிர்­வ­ரும் உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­த­லின்­போது இந்த அமைப்பு பொது எதி­ர­ணி­யின் தேர்­தல் பரப்­பு­ரைக்கு உறு­து­ணை­யாக இருக்­கும் என்­ப­து­டன், 2020ஆம் ஆண்டு அரச தலை­வர் தேர்­த­லில் பொது­வேட்­பா­ள­ரா­கக் கள­மி­றங்­கு­வார் என எதிர்­பார்க்­கப்­ப­டும் கோத்­த­பாய ராஜ­பக்­ச­வின் அர­சி­யல் பய­ணத்­துக்­கான ஆரம்­ப­மா­க­வும் இது அமை­யும் என்று அர­சி­யல் அவ­தா­னி­கள் சுட்­டிக்­கா­டு­கின்­ற­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்