மாயக்கல்லியில் மீண்டும் பதற்ற நிலைமை!!

இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி பிரதேசத்தில் பௌத்தர்கள் சிலர் மீண்டும் சட்ட விரோதமாக தங்குமிடங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்திருப்பதை அடுத்து மீண்டும் அங்கு பதற்ற நிலைமை உருவாகியுள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது.

பௌத்த மத குருமார்கள் சிலரும், பௌத்த மக்களும் இணைந்து, தமிழ் நபரிடம் இருந்து காணியொன்றைக் கொள்வனவு செய்து, அதில் சட்டவிரோதமாக தங்குமிடங்களை அமைக்க முயற்சிக்கின்றனர் என்று கூறப்படுகின்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண அமைச்சர், ஏ.எல்.மொஹ்மட் நஸீர் ஆகியோர் நேரில் சென்றுள்ளனர் என்றும், இது தொடர்பில் அரச தலைவரின் நேரடி கவனத்துக்குக் கொண்டுவரப்படும் என்றும் கூறப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்