பொன்சேகாவுக்கே தெரியாதவைகளா அமைச்சர்களுக்குத் தெரியப்போகிறது?

போரின்­போது நடந்­தவை தொடர்­பி­லும் போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் சரத் பொன்­சே­கா­வுக்குத் தெரி­யாத விட­யங்­களா அமைச்­சர்­கள் சஜித் மற்­றும் மகிந்த சம­ர­சிங்­க­வுக்குத் தெரிந்­து­வி­டப் போகின்­றது ?

இவ்­வாறு கேள்வி எழுப்­பி­யுள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு.
இரா­ணு­வத்­தின் முன்­னாள் தள­பதி லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மனி­தப் படு­கொலை விட­யத்­தில் குற்­றம் இழைத்­தார் என்று போரை நடத்­திய இரா­ணு­வத் தள­ப­தி­யும், தற்­போ­தைய அமைச்­ச­ரு­மான சரத் பொன்­சேகா தெரி­வித்­தி­ருந்­தார். விசா­ர­ணை­கள் நடந்­தால் ஆதா­ரங்­க­ளைத் தான் முன்­வைப்­பார் என்­றும் கூறி­யி­ருந்­தார்.

பிரே­சில் உட்­பட5 தென்­ன­மெ­ரிக்க நாடு­க­ளின் தூது­வ­ராக இருந்­த­வ­ரான லெப்­டி­னன்ட் ஜென­ரல் ஜெகத் ஜய­சூ­ரிய மீது போர்க் குற்ற வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டதை அடுத்தே பொன்­சேகா இந்­தக் கருத்­தைத் தெரி­வித்­தி­ருந்­தார்.

ஆனால், ஜென­ரல் ஜெகத் குற்­றம் இழைக்­க­வில்லை என்று போர் முடி­வ­டைந்த நிலை­யில் இலங்­கை­யில் மனித உரி­மை­கள் அமைச்­ச­ராக இருந்­த­வ­ரான சுதந்­தி­ரக் கட்­சி­யைச் சேர்ந்த முன்­னாள் அமைச்­சர் மகிந்த சம­ர­சிங்க மற்­றும் தற்­போ­தைய அர­சில் அமைச்­ச­ராக இருப்­ப­வ­ரான ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யைச் சேர்ந்த சஜித் பிரே­ம­தாச ஆகி­யோர் தெரி­வித்­தி­ருந்­த­னர்.

‘‘ஜெகத் ஜய­சூ­ரி­யாவை அரசு பாது­காக்­கும். இரா­ணு­வத்தை எந்­தச் சந்­தர்­பத்­தி­லும் காட்­டிக் கொடுப்­ப­தில்லை என்­பது அர­சின் கொள்கை. பொன்­சேகா கூறி­யி­ருப்­பது அவ­ரது தனிப்­பட்ட கருத்து. இது தொடர்­பில் அமைச்­ச­ர­வை­யில் பேசப்­ப­ட­வில்லை. அத­னால் அமைச்­ச­ர­வைக் கூட்­டுப் பொறுப்­புக்கு உட்­பட்ட விட­ய­மா­காது’’ என்று மகிந்த சம­ர­சிங்க கொழும்­பில் நேற்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

‘‘அமைச்­சர் சரத்­பொன்­சே­காவே இறு­திப் போரை வழி­ந­டத்­தி­ய­வர். போரின் போது நடந்த விட­யங்­கள் அவ­ருக்­குத்­தான் நன்கு தெரி­யும். அவ­ருக்­குத் தெரி­யாத ஒன்று அமைச்­சர்­க­ளான சஜித் பிரே­ம­தாச மற்­றும் மகிந்த சம­ர­சிங்­க­வுக்கு தெரிந்­தி­ருக்க வாய்­பில்லை. சரத் பொன்­சேகா கூறு­வ­தைப் போன்று போர்க்­குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்த வேண்­டும்’’ என்­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்