கொக்கிளாய் தமிழ் மீனவர்களிற்கு தொடர்ந்தும் தடை!

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்திணைக்கள அதிகாரிகளது திட்டமிட்ட சிங்கள விசுவாசத்தால் உள்ளுர் மீனவர்கள் மீன்பிடிக்க விதிக்கப்பட்ட தடை மாதக்கணக்கினில் நீடித்துவருகின்றது. சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதியினில் பாடுகள் எனப்படும் கரையோரப்பகுதிகளை ஒதுக்கி வழங்குவது தொடர்பாக கடற்றொழில் நீரியல் வளத்திணைக்களத்தால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அவ்வாறு கொக்குளாய் சென் அன்ரனிஸ் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் தவறுகள் கானப்படுவதனால் அதனை திருத்தம் செய்ய அவகாசம் வேண்டுமென முல்லைத்தீவு நீதிமன்றில் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களப் பிரதிநிதி தற்போது கால அவகாசம் கோரியுள்ளதாதக தெரியவருகின்றது.

கடற்றொழில் தீரியல்வளத் திணைக்கள அதிகாரி திடைக்களத்தினால் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரத்தில் சில திருத்தகங்கள் செய்து புதிய குற்றப்பத்திரம் தாக்கல் செய்யவேண்டிய கால அவகாசம் கோரியுள்ளனர்.
வழக்குத் தாக்கல் செய்யப்பட்டு 18 மாதம் கடந்து விட்ட நிலையில் தமிழ் மீனவர்கள் இன்றுவரை தொழிலுக்குச் செல்ல முடியாதுள்ளது.ஆனால் சிங்கள மீனவர்களோ கடற்படை மற்றும் இலங்கை காவல்துi அனுசரணையுடன் தொழிலில் ஈடுபட்டுவருகின்றார்.ஆனால் பூர்வீகமாக வாழ்ந்துவரும் தமிழ் மீனவர்கள்; தொழிலின்றி வாழ்ந்துவருகின்றனர்.

இந்நிலையினில் வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.முல்லைதீவினை சேர்ந்த கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் ஆக்கிரமித்துள்ள சிங்கள மீனவர்களிடமிருந்த மாதாந்தம் மில்லியன் கணக்கினில் வருவாயினை பெற்றுவருவதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்