புதிய கருத்தடை மருந்துகள் அறிமுகம்

மத்திய உடல்நலம் மற்றும் குடும்ப நலத்துறை புதிய கருத்தடை மருந்துகளை அறிமுகம் செய்துள்ளது.

அந்தரா எனும் ஊசி மூலம் செலுத்தப்படும் மருந்தும், சஹாயா எனும் மாத்திரையும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவை இலவசமாக மருத்துவக் கல்லூரிகளிலும், மாவட்ட மருத்துவமனைகளிலும் கிடைக்கும். இப்போது மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, ஹரியானா,மேற்கு வங்கம், ஒடிஷா, டெல்லி மற்றும் கோவாவில் கிடைக்கும். இவை பாதுகாப்பானவை மற்றும் அதிகளவில் பலனளிப்பவை என்றும் கூறப்படுகிறது.

அந்தரா மூன்று மாதங்களுக்கு பலன் தரும். சஹாயா ஒரு வாரத்திற்கு பலன் தரும். இந்த மருந்துகள் தம்பதியினர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை திட்டமிட உதவும் என்று அமைச்சகம் தெரிவித்தது. இது தொடர்பாக அடிமட்ட சுகாதார பணியாளர்களுக்கு தேவையான பயிற்சியை வழங்கும் பணி நாடு முழுவதும் நிறைவடைந்துள்ளது. கருத்தடை மருந்துகளை விநியோகம் செய்ய தனி மென்பொருள் ஒன்றையும் அரசு வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு தனது இயக்கமான பரிவார் விகாஸ் குடும்பக்கட்டுப்பாடு திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இயக்கம் மூலம் 2020 ஆம் ஆண்டில் மொத்த கருத்தடை சாதனங்களின் தேவையில் 74 சதவீதத்தை நவீன சாதனங்கள் மூலம் நிறைவேற்ற உறுதிபூண்டுள்ளதாக அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்