வடகொரியாவுக்கு எதிராக நடவடிக்கை – ஆதரிப்பதாக ஜ.நாவில் சீனா அறிவிப்பு

தடைகளை மீறி தொடர்ந்து அணிஆயுத சோதனைகள் நடத்திவரும் வடகொரியா மீது ஐ.நா.சபை தகுந்த நடவடிக்கை எடுத்தால அதற்கு சீனா ஆதரவளிக்கும் என வடகொரியாவின் நட்பு நாடான சீனா அறிவித்துள்ளது.

சர்வதேச ஒப்பந்தங்களை மீறி வடகொரியா தொடர்ந்து சர்ச்சைக்குறிய கொரிய தீபகற்ப பகுதியில் அணுஆயுத சோதனைகள் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. ஐ.நா. சபையும் வடகொரியாவின் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்து வந்தது.

இருப்பினும், வடகொரியாவின் அண்டை நாடான சீனா அந்நாட்டுடன் நல்ல நட்புறவில் இருந்து வந்தது. சீனா அந்நாட்டிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வந்தது. சமீபத்தில் வடகொரியா மேலும் ஒரு சக்திவாய்ந்த அணு குண்டினை பூமிக்கு அடியில் பரிசோதித்தாகவும் இதன் விளைவாக 6.3 ரிக்டர் அளவிலான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இந்த பரிசோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஆனால், வட கொரியாவோ தாங்கள் நடத்தியது அணு குண்டு பரிசோதனை அல்ல, ஹைட்ரஜன் குண்டு பரிசோதனைதான் என கூறுகிறது.

இந்நிலையில், வடகொரியாவின் சமீபத்திய நடவடிக்கையை தொடர்ந்து அந்நாட்டின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீனா ஐ.நா.சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக பேசிய சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யி கூறியதாவது:

கொரிய தீபகற்பத்தின் தற்போதைய நிலவரத்தின்படி, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்பதை சீனா ஒப்புக்கொள்கிறது. இப்பிரச்சனையில் தடை விதிப்பதும், அழுத்தம் கொடுப்பதும் முழு தீர்வு தராது. பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நிரந்தர தீர்வு காண முடியும். மேற்கொண்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனை மூலம் இந்த பிரச்சனையை தீர்க்க முடியும் என நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்