ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டும் – நிதி அமைச்சு!

நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இதைவிட 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் தனியார் வகுப்பு நடத்தும் ஆசிரியர்கள் கோடிக்கணக்கில் உழைக்கின்றனர். அத்துடன் தனியார் மருத்துவர்களும் சட்டத்தரணிகளும் அதிகளவான வருமானம் பெறுகின்றனர். இவர்கள் அனைவரும் வரி செலுத்துகின்றார்களா என்பது கேள்விக்குரியது. இதன் காரணமாகவே உள்நாட்டு இளைவரிச் சட்டவரைபு கொண்டுவரப்படுகின்றது.

மக்கள் மீது சுமையைத் திணிக்க இறைவசரிச் சட்டத்தைக் கொண்டுவரவில்லை. மறைமுக வரியைக் குறைத்து நேரடி வரியை அதிகரிக்கவே இச்சட்டம் கொண்டுவரப்படுகின்றது.

ஒரு இலட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் வரிக்கோப்பு இலக்கம் அறிமுகப்படுத்தப்படும்.

வரிக்கோப்பு இலக்கம் உள்ள அனைவரும் வரி செலுத்தவேண்டிய தேவையில்லை. வரி செலுத்தாது ஏமாற்றுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன்மூலம் வருடத்திற்கு 45மில்லியன் ரூபா வருமானத்தைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்தினூடாக மறைமுக வரி குறைக்கப்பட்டு நேரடி வரி அதிகரிக்கப்படும். தற்போது நேரடி வரி 20 வீதமாகவும், மறைமுக வரி 80வீதமாகவுமுள்ளது.

அதனை 40இற்கு 60 என மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு மறைமுக வரி குறைக்கப்பட்டு நேரடி வரி அதிகரிக்கப்படும். இதனால் வற் வரி குறைக்கப்படும் எனத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்